வீதியில் உறங்கிய எம்.பி.! – தட்டி எழுப்பிய பொலிஸ் அதிகாரி.
டலஸ் அணியின் எம்.பி. டாக்டர் திலக் ராஜபக்ச வீதியில் உறங்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அண்மையில் ஒலிப்பதிவு ஒன்று செய்வதற்காக அவர் இரவு நேரம் மஹரகமவில் உள்ள ஸ்டூடியோ ஒன்ருக்குச் சென்றார். நீண்ட நேரம் எடுத்துவிட்டது அது முடிவதற்கு. காலை ஐந்து மணியாகிவிட்டது.
அவர் வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்தார். அவரால் முடியவில்லை. கடும் நித்திரை.
வீதியோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு அப்படியே வாகனத்துக்குள் தூங்கிவிட்டார்.
பொலிஸ் அதிகாரி ஒருவர் வந்து கண்ணாடியில் தட்டிய சத்தம் கேட்டுத்தான் திலக் எம்.பி. கண் விழித்தார். அப்போது விடிந்துவிட்டது.
இந்தப் பக்கம் வாகனம் நிறுத்தத் தடை என்றார் குறித்த பொலிஸ் அதிகாரி. தன்னை யார் என்று அறிமுகப்படுத்தி நடந்ததைச் சொன்னார் திலக் எம்.பி.
“பரவாயில்லை சேர்… விபத்துக்குள் சிக்கிவிடுவீர்கள் என்று பயந்துதான் எழுப்பினேன்” என்றார் குறித்த பொலிஸ் அதிகாரி.
அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் திலக் எம்.பி.