குவைத்தில் 2 இடங்களில் ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் ஒருவர் பலி.

குவைத்தின் Salmi பகுதியில் 2 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் வாகனங்கள் முற்றிலுமாக நொறுங்கியது.
இதில் ஒருவர் கவலைக்கிடமாக மீட்கப்பட்டனர், மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டனர்.
இரண்டாவது விபத்து Jassim Al-Kharafi சாலையில்(Jahra Industrial பகுதியின் எதிர்புறம்) ஏற்பட்டது. இதில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கரமான விபத்து ஏற்பட்டது.
இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.