1,600 எச்.ஐ.வி. நோயாளர்கள் சமூகத்தில் இன்று நடமாட்டம்- தேசிய பாலியல் தொற்றுப் பிரிவு எச்சரிக்கை
“இலங்கையில் 2000 எச்.ஐ.வி. நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 1600 நோயாளர்கள் பதிவாகாத நிலையில் இன்று சமூகத்தில் நடமாடி வருகின்றனர்.”
– இவ்வாறு தேசிய பாலியல் தொற்று மற்றும் எச்.ஐ.வி. ஒழிப்புப் பிரிவின் தலைவர் விசேட மருத்துவர் ரசான்ஜலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எச்.ஐ.வி. தொற்றுக்கு இலக்காகிய நோயாளர்களில் 19 தொடக்கம் 25 வயதுடையவர்களே அதிகமாக உள்ளனர். இதுவரை 2000 எச்.ஐ.வி. நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 1600 நோயாளர்கள் பதிவாகாத நிலையில் சமூகத்தில் இன்று நடமாடி வருகின்றனர்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் இருக்கின்றனர்.
இவர்களில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களே அதிகமாக உள்ளனர்” – என்றார்.