சீன 118 செயலிகளுக்கு இந்திய மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு இந்திய மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
லடாக் எல்லையில் நடைபெற்ற இந்தியா – சீனா ராணுவ மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருந்ததால் டிக்டாக் உள்பட 58-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது.
மேலும், பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் பல செயலிகள் தடை விதிக்கப்படும் எனவும், அது குறித்த பரிசீலித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் பப்ஜி, கட் கட், பைடு, ரைஸ் ஆஃப் கிங்டம் உள்பட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடைவிதித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் இந்த தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.