யாழ்பாணத்தில் ஆச்சர்யம் : நெற்றிக்கண்ணோடு பிறந்த ஆட்டுக்குட்டி.
யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு நவகிரி பகுதியில் விசித்திரமான கண்களுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது.
நவகிரிப் பகுதியில் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் கந்தசுவாமி பாலகரன் என்ற விவசாயியின் ஆடு குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. பிறந்த ஆட்டுக்குட்டியின் நெற்றிக்கு மேல் இரண்டு கண்களும் ஒரே நிலையில் காணப்படுகின்றன.
டிசம்பர் 29ம் தேதி பிறந்த இந்த அதிசய ஆட்டுக்குட்டியை அப்பகுதியை சேர்ந்த பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
யாழ்.பல்கலைக்கழகத்தின் விலங்கு விஞ்ஞான பிரிவின் குழுவும் இந்த அற்புதமான ஆட்டுக் குட்டியை அவதானித்துள்ளது.