ஈசி கேஸ் மூலம் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பொலிஸ் சார்ஜன் கைது!
சார்ஜன் ஒருவரின் சகோதரர் வீட்டில் இருந்து சுமார் 28 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் சற்றுநேரத்திற்கு முன்னர் மீட்கப்பட்டுள்ளது.
மீகஹவத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட சோதனையில் குறித்த ஹெரோயின் தொகை மீட்கப்பட்டுள்ளது.
மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்த மனோஜ் ருவான் பண்டார என்று குறித்த பொலிஸ் சார்ஜன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈசி கேஸ் முறையை பயன்படுத்தி குறித்த கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் சார்ஜன் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய குறித்த நபர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மைய காலங்களில் போதைப் பொருள் வியாபாரத்தில் காவல் துறையினரே ஈடுபட்டு வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.