டுபாயில் இருந்து மீண்டும் அமெரிக்க குடியுரிமையை கோருகிறார் கோட்டா.
மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் தப்பியோடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மீண்டும் தனது அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கோட்டாபய தனது குடும்பத்துடன் 2022 டிசம்பரில் இலங்கையை விட்டு வெளியேறி தற்போது துபாயில் விடுமுறையில் இருக்கிறார்.
அவர் டுபாய் ஊடாக அமெரிக்கா சென்றதாக முதலில் தெரிவிக்கப்பட்டது, ஆனால் கோட்டாபய ராஜபக்சவிடம் அமெரிக்கா செல்வதற்கான விசா இல்லை.
கோட்டாபய ராஜபக்ச தனது அமெரிக்க பிரஜாவுரிமையை மீளப் பெற்றுக் கொள்ளுவதற்கு தனது சட்டத்தரணிகள் ஊடாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திடம் முறையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், 2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அவர் கைவிட்ட அமெரிக்க குடியுரிமையை மீண்டும் பெறுவதற்கான அவரது கோரிக்கையை அமெரிக்க அதிகாரிகள் இன்னும் பரிசீலிக்கவில்லை என்று சண்டே டைம்ஸ் அறிக்கை மேலும் கூறியது.
2022 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ச, தனது அமெரிக்க குடியுரிமையை திரும்பப் பெறுமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க குடியுரிமைக்கான முன்னாள் ஜனாதிபதியின் முயற்சி இன்னும் வெற்றிபெறவில்லை என்பதை அமெரிக்க தூதரகத்திற்கு நன்கு தெரிந்த ஒரு வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.