டுபாய் சென்ற கோட்டாபய 5ம் திகதி மீண்டும் இலங்கைக்கு …

தனது குடும்ப உறுப்பினர்களுடன் விடுமுறைக்காக டுபாய் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி தனது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தையுடன் டிசம்பர் 26ஆம் திகதி டுபாய் சென்றிருந்தார்.
கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 5ஆம் திகதி தனது மனைவி மற்றும் பிரத்தியேக செயலாளருடன் இலங்கை திரும்பவுள்ளதாகவும் அவரது மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.