மக்கள் போராட்டத்தை ஒடுக்கவே ரணிலை அரியணை ஏற்றினோம் – ராஜபக்சக்களின் சகா கூறுகின்றார்.

மக்கள் போராட்டத்தை (அரகலய) அழிப்பதற்கான ஒரு ஆயுதமாகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக கொண்டு வந்தோம் என்று ராஜபக்சக்களின் சகாவான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச ஆதரவுக் கலைஞரான இராஜ் வீரரத்னவுக்கு அளித்த சர்ச்சைக்குரிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

காலிமுகத்திடலில் உள்ள ‘கோட்டா கோ ஹோம்’ தளத்தில் நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கிய குண்டர் கும்பலை வழிநடத்தியதற்காக நிஷாந்த வழக்கு விசாரணையை எதிர்கொள்கின்றார். இந்த நேர்காணலில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும் போது, “ரணில் விக்கிரமசிங்க பொது எதிர்ப்பு இயக்கமான ‘அரகலய’வுக்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்” – என்றார்.

“ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக நாங்கள் அவரை அழைத்து வந்தோம். ‘அரகலய’ மக்கள் இயக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ரணிலை ஜனாதிபதியாக நியமித்தோம். அது நன்றாகப் போய்க்கொண்டிருக்கின்றது. ‘அரகலய’ மீது தாக்குதல் நடத்தவே அவர் நியமிக்கப்பட்டார்” – என்று இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.