இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது விக்கினேஸ்வரா வி க
யாழ்ப்பாண மாவட்டகரப்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதியுடன்
தெல்லிப்பளைமின்னலடியாக்கி
(M. A JACKY)விளையாட்டுக்கழகம் முதல்முறையாக. மின்னொளியில் நடத்தும் கரப்பந்தாட்ட சுற்று போட்டித் தொடரில் அச்சுவேலி விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்றது’
நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) கழக மைதானத்தில் இடம் பெற்ற ஏ பிரிவினருக்கான ஆட்டத்தில்
அச்சுவேலி விக்கினேஸ்வரா
விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து புத்தூர் சென்றல் ஸ்ரார் விளையாட்டுக் கழக அணி மோதியது.
இதில் அச்சுவேலி விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து புத்தூர் சென்றல் ஸ்ரார் விளையாட்டு க்கழகம் மோதியது
இப் போட்டியில் தமது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அச்சுவேலி விக்கினேஸ்வரா அணியினர் முதலாவது சுற்று ஆட்டத்தினை 25:16 என்ற புள்ளி அடிப்படையிலும் 2 ஆவது சுற்று ஆட்டத்தினை 25:19 என்ற அடிப்படையிலும் வெற்றி பெற்று வெற்றிியை தனதாக்கிக் கொண்டனர்.