பரிகாரம் என்பது என்ன.
பரிகாரம் என்பது ஜாதகரின் சிந்தனை திறன், செயல் பாடு, அறிவில் விழிப்பு நிலை மேம்படுத்துவது.
கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்தால் தோஷம் போய்விடும் என்று சொல்லுவது உண்மையில்லை , கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தால் ஜாதகத்தில் எந்தவீடு பாதிக்கப்பட்டு இருக்கிறதோ அந்த வகையில் இருந்து வரும் பிரச்சனைகளுக்கு ஜாதகரின் அறிவு விழிப்புடன் செயல்பட்டு, அந்த பிரச்சனைகளுக்கு ஜாதகரே தீர்வு காணும் ஆற்றலை கோவில் வழிபாடு / பரிகாரம் ஜாதகருக்கு கொடுத்து விடும் என்பதே உண்மை , அது எந்த வகை பரிகாரமானாலும் சரி .
பரிகாரம் என்றாலே மக்கள் அனைவருக்கும் ஜோதிடர்கள் சொல்லும் ஆலோசனை என்னவென்றால் கோவில் வழிபாடு, பூஜை முறைகள் , நவக்கிரக சாந்தி , இரத்தின ஆலோசனை , பெயர் மாற்றம் , என எண்ணில் அடங்காத பல பரிகாரங்களை, ஜோதிட ஆலோசனை பெற வந்தவர்களிடம் சொல்கின்றனர் ,
இதை கேட்கும் மக்கள் அனைவரும், நிறைய பொருட் செலவு செய்தும் பலன் பெற முடியாமல் இருப்பவர்கள் அதிகம், இதற்க்கு காரணம் ஜோதிடர்கள் சொன்ன பாரிகாரங்கள் சரியா ? அல்லது அந்த பரிகாரங்கள் ஜாதகருக்கு பலன் தரவில்லையா?
மனிதன் ஒவ்வொருவரும் நவக்கிரகங்களால் தாக்கத்தில் இருக்கின்றனர்.நம் கண்ணுக்கு தெரியாத காந்த அலைகள் மனிதனை ஆக்ரமித்து கொண்டிருக்கின்றன.நாம் வாய் அசைத்து பேசும் காற்று எப்படி வார்த்தைகளாக மாறுகிறதோ,அதேபோல் கோவிலில் அர்ச்சனை செய்யும்போது சொல்லப்படும் மந்திரங்கள் நம்மை தாக்கும் கிரக அலைகளை சிதறடிக்கும் தன்மை உள்ளவை.
அதேபோல் ஜாதகத்தில் சிறுவிபத்து நடக்கும் என்று இருந்தால்,அதற்கு பரிகாரமாக ரத்ததானம் செய்யலாம்.
ராகு திசையால் பாதிக்கபட்ட நபர் திருமணமாகமல் இருக்கும் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கலாம்.
மனிதர்கள் அனைவருமே நவக்கிரக ஆளுமையில் இருப்பதால்,நாம் எல்லா மனிதர்களிடம் அன்பு,பாசம்,கருணை கொள்ளவேண்டும்.மேலும் அனைவரின் மனமும் புண்படாவண்ணம் நடக்கவேண்டும்.இதுவே நவக்கிரகங்களுக்கு செய்யும் பெரிய பரிகாரம் ஆகும்.
சூரியனின் அம்சமாக நம் தந்தையும்,சந்திரனின் அம்சமாக நம் தாயும் இருக்கின்றனர்.இவர்களுக்கு பணிவிடை செய்து,இவர்களின் மனம் புண்படாமல் மகிழ்ச்சியோடு வைத்திருந்தால்,இதுவே பரிகாரத்திலேயே பெரிய பரிகாரம் ஆகும்.