குட்டித் தேர்தலை அரசு ஒத்திப்போட முயன்றால் பெரும் போராட்டங்கள்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவெடுத்துள்ள நிலையில், ஏதாவது தந்திரோபாயத்தைப் பயன்படுத்தித் தேர்தலை ஒத்திப்போடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிராக பாரியளவில் இரண்டு கட்டங்களாகப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.
முதலாம் கட்டப் போராட்டமாக நீதிமன்றம் செல்லுதல். வரலாற்றில் முதல் தடவையாக இதில் அதிக எண்ணிக்கையிலான சட்டத்தரணிகள் ஆஜராவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக நாடாளுமன்றத்துக்கு வெளியே பாரிய மக்கள் போராட்டம். நாடு பூராகவும் இந்தப் போராட்டங்களை முன்னெடுப்பதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.