பொங்கல் விழா கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிறது!
இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால் ஆண்டுதோறும் நடாத்தபடும் பாரம்பரிய விளையாட்டு விழாக்களுடனான் பொங்கல் கொண்டாட்டம் இந்த ஆண்டும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பிக்க உள்ளது!
அந்தவகையில் ஆரம்ப நிகழ்வாக வடமாகாணரீதியான சைக்கிள் ஓட்டப்போட்டி (08-01-2023) ஞாயி்ற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு இளவாலை சந்தியில் இருந்து ஆரம்பிக்கவுள்ளது!
தொடர்ந்து அன்றைய தினம் முதல் இளவாலை ஆலடிச் சந்தி அருகே யாழ்மாவட்ட தாச்சி சங்கத்தின் அனுமதியோடு 16 அணிகள் மோதும் மின்னொளியிலான தாச்சிப்போட்டிகளும், அதனை தொடர்ந்து 14-01-2022 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு சித்திரமேழிச் சந்தியிலிருந்து ஆண்களுக்கான மரதனோட்ட போட்டியும் இடம்பெறவுள்ளதோடு,
பொங்கல் தினத்தன்று காலை 8.00 மணி முதல் காங்கேசன்துறை வெளிச்சவீட்டருகே மாபெரும் படத்திருவிழா இடம்பெறவுள்ளது! (வழமையான விதிமுறைகள்)
பொங்கல் தினத்தன்று மாலை நிகழ்வுகளாக பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகளான கிடுகு பின்னுதல், கயிறுழுத்தல், தலகணைச் சண்டை, சறுக்குமரம்ஏறுதல், தேங்காய் துருவுதல் மற்றும் சிறார்களுக்கான போட்டிகளும் கலைகலாசார நிகழ்வுகளும் பரிசளிப்பு நிகழ்வுகளுமாக தமிழர் தனிப்பெரும் பண்பாடுகளோடு பொங்கல்விழாவை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளபட்டுள்ளன!
தமிழர் திருநாளை கொண்டாட அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்!