தொடரை இழந்ததற்குபின், அதற்கான காரணத்தை கூறிய இலங்கை கேப்டன் தசுன் ஷனக்கா.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடிய 3வது மற்றும் டிசைடர் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்தது.
ராஜ்கோட் பேட்டிங் செய்ய ஏதுவாக இருந்ததால், சூரியகுமார் யாதவ் 7 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் உட்பட 51 பந்துகளில் 112 ரன்கள் அடித்து, மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு வான வேடிக்கை காட்டினார். டி20 போட்டிகளில் இவர் அடிக்கும் 3வது சதம் இதுவாகும்.
சூரியகுமார்-க்கு முன்னர் மூன்றாவது வீரராக களமிறங்கிய ராகுல் திரிப்பாதி 16 பந்துகளில் 35 ரன்கள் அடித்து நல்ல டெம்போ செட் செய்தார். கடைசியில் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் 21 ரன்களை வெறும் 9 பந்துகளில் அடிக்க, இந்திய அணி 20 ஓவர்களில் 228/5 ரன்கள் அடித்திருந்தது.
ராஜ்கோட் மைதானத்தில் எப்படிப்பட்ட ஸ்கொரும் சேஸ் செய்யமுடியும் என்பதால், நம்பிக்கையுடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால், இலங்கை பேட்ஸ்மென்கள் எவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து நிலைத்து ஆடவில்லை.
குஷால் மெண்டிஸ் 23 ரன்கள், தனஞ்செய டி சில்வா 22 ரன்கள் மற்றும் கேப்டன் சனக்கா 23 ரன்கள் என டாப் ஆர்டர் முதல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரை சொற்பரன்கள் மட்டுமே அடித்து அவுட் ஆகினர்.
இறுதியில் 137 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட் ஆனது. 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-1 என தொடரை கைப்பற்றியது.
போட்டி முடிந்தபின் தொடரை இழந்தது பற்றி பேட்டியளித்த இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனக்கா கூறியதாவது:
“இந்த சீரியஸ்-க்கு வருவதற்கு முன் நான் பார்மில் இல்லை. தொடரின் ஆரம்பத்திலேயே மீண்டும் பார்மிற்கு வந்தது மற்றும் பர்ஃபார்மன்ஸ் கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
எனது விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் டி20 போட்டிகளில் முழுமையாக பந்துவீச முடியவில்லை. ஒருநாள் தொடரின்போது மீண்டும் பந்துவீச தயாராகியுள்ளேன். வெற்றிபெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். குறிப்பாக, மிகச்சிறப்பாக ஆடிய சூரியகுமார் யாதவிற்கு வாழ்த்துக்கள். தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். இதைத்தான் எனது அணிக்கு கூற விரும்புகிறேன்.” என்றார்.