ஐந்து பிள்ளைகளை கொண்ட குடும்பங்களிற்கு  மாதாந்தம்  சத்துணவு வழங்கும் திட்டம்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஐந்து பிள்ளைகளை அங்கத்தவர்களாக கொண்ட குடும்பங்களிற்கு  மாதாந்தம்  சத்துணவு வழங்கும் திட்டம் இன்று ஆரம்பம்.
குடும்பத்தில் ஐந்து அல்லது அதற்கு மேல் பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களிற்கு கரைச்சி பிரதேச சபையினால் மாதாந்தம் மூவாயிரம் ரூபா பெறுமதியான சத்துணவு வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டு தொடக்கம் ஆரம்பமாகும் குறித்த வேலைத்திட்டத்தில் குறித்த ஆண்டில் இதுவரை 09 பேர் மாத்திரமே தகுதி பெற்றுள்ளதாக கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
இவர்களிற்கு ஒரு மாதத்திற்கு மூவாயிரம் ரூபா பெறுமதியான சத்துணவினை வழங்குவதற்கு பிரதேச சபை தீர்மானித்துள்ளதாகவும் ஒரு வருடத்திற்கு குறித்த சத்துணவு பொதிகள் பிரதேச சபையினால் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் கலைவாணி தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் குடும்ப நல சுகாதார வைத்தியர் நிமால் கிஸ்ரோபன் குடும்பநல உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.