வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக மஹிந்த குணரட்ண!

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக மஹிந்த குணரட்ண தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இன்று முற்பகல் 11.21 மணியளவில் சுபநேரத்தில் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் அமைந்துள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
வடக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய ப்ரியந்த வீரசூரிய, மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் சப்ரகமுவ மாகாணத்துக்குப் பொறுப்பான பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்த மஹிந்த குணரட்ண வடக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.