உள்ளூராட்சி தேர்தலை 10 பில்லியனுக்கும் குறைவாக நடத்த முடியும்… தேர்தல் ஆணையம்!
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக அரசாங்கம் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள போதிலும், அதனை விட குறைவான பணத்தில் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (08) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை ஒத்திவைப்பது தேர்தல் ஆணைக்குழுவின் வேலையல்ல என்றும் தேர்தல் கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டத் தேவைகளை நடைமுறைப்படுத்துவது அதன் பொறுப்பு என்றும் ஆணையாளர் கூறுகிறார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவித்ததுடன் நீதிமன்றத் தீர்ப்பு கிடைக்கும் வரை தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் டெய்லி மிரர் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
“2022 வாக்காளர் பட்டியலின்படி 16856629 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.