8 நாடுகள் பங்கேற்கும் பேட்மிண்டன் போட்டிகளில் 2 தமிழ் சிறுவர்கள்
8 நாடுகள் பங்கேற்கும் பேட்மிண்டன் U15 போட்டிகள் (8 Nations Badminton champion ship) ஜேர்மனி Lüdinghausen நகரில் அடுத்த மாதம் (பெப்ரவரி) 23ம் திகதி தொடக்கம் , பெப். 26 ம் திகதி வரை நடைபெறவுள்ளது
இப்போட்டியில் முதல் தடவையாக இங்கிலாந்து நாட்டிலிருந்து பங்கு கொள்ளும் 15 வயதிற்குட்பட்டோர் பிரிவில் சஜன் செந்தூரன் , சிராதா கோபாலகிருஷ்ணன் ஆகிய இரு தமிழ் சிறுவர்கள் இங்கிலாந்து நாட்டின் அணியில் இடம் பெறுகிறார்கள்.
பதினைந்து வயதுக்கு உட்பட்ட இங்கிலாந்து அணியில் இடம்பெறுகின்ற பத்து நபர்களில் புலத்தில் வாழ் இலங்கை தமிழ் சிறுவர்கள் இருவர்கள் உள்வாங்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் கொண்டதாக அவதானிக்கப்படுகிறது.
செய்தி : ஜேர்மனியிலிருந்து சசி