களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டது.

அக்கரைப்பற்றில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டமாவடியில் கைப்பற்றப்பட்டது.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் கடந்த ஒரு மாத காலமாக இரவு நேரங்களில் இடம்பெற்று வரும்
திருட்டு சம்பவத்தினால் பல இலட்சக்கணக்கான பணம், தங்க நகைகள் மற்றும் வாகனங்கள் களவாடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
அதனடிப்படையில், கடந்த 28.08.2020ஆம் திகதி இரவு 11.30மணியளவில் அக்கரைப்பற்றில் வைத்து விலை கூடிய மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால் களவாடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, களவாடப்பட்ட மோட்டார் சைக்கிளை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் அம்பாறை மாவட்ட குற்ற புலன் விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் கே.எம்.ஏ.கே.பண்டார அவர்களின் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதிரடியாக மேற்கொண்டதன் விளைவாக குறித்த மோட்டார் சைக்கிள் நேற்று (02) புதன்கிழமை ஓட்டமாவடி பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட குற்ற புலன் விசாரணை பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.