வடமராட்சியில் தூக்கிலிருந்து பூசாரியின் சடலம் மீட்பு!
யாழ்., வடமராட்சி, தம்பசிட்டிப் பகுதியில் பூசாரி ஒருவர் தூக்கிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிதம்பரநாதக்குருக்கள் சபாரத்தின தேசியர் (வயது 76) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
வீட்டிலிருந்தவர்கள் வெளியே சென்றிருந்த வேளையில் அவர் தனிமையில் இருந்துள்ளார். இதன்போதே அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மரணம் தொடர்பில் பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராசா விசாரணைகளை மேற்கொண்டார்.