வட மாகாண விளையாட்டு விழாவில் 2ம் இடம் இடத்தினைப் பெற்ற முல்லை. அணியினர் கௌரவிப்பு!
2022ம் ஆண்டுக்கான 15 வது வடமாகாண விளையாட்டுவிழாவின் முல்லைத்தீவு மாவட்டம் 129 பதக்கங்களைப் பெற்று, தொடர்ந்தும் 3வது தடவையாக 2ம் இடத்தை தமதாக்கி சாதனை படைத்தது.
இந் நிலையில் மாகாணத்தில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டமைக்கான வெற்றிக்கேடயங்களை மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு மற்றும் குறித்த சாதனையை நிலைநாட்டிய வீர வீராங்கனைகள் அவர்தம் பயிற்றிவிப்பாளர்களை வாழ்த்தி கௌரவிக்கின்ற நிகழ்வு இன்று(11) இடம்பெற்றது.
மாவட்ட செயலக அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் பி.ப 2.30மணிக்கு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் முகுந்தன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
மேலும் இதன்போது முல்லை. மாவட்ட அணியினர் சுவீகரித்துக்கொண்ட வெற்றிக் கேடயங்கள் அதிதிகளிடம் கையளிக்கப்பட்டதுடன், குறித்த வெற்றியின் விடயங்கள் பகிரப்பட்டது.
தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) க.கனகேஸ்வரன் ஆகியோரின் வாழ்த்துரைகள் சிறப்புற இடம்பெற்றன.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) க.கனகேஸ்வரன், திட்டமிடல் பணிப்பாளர் ம.கி வில்வராஜா, உதவி அரசாங்க அதிபர் லிசோ கேகிதா, மாவட்ட புள்ளிவிபரவியலாளர் இராஜசூரி, பயிற்றுவிப்பாளர்கள், வீர வீரங்கனைகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த வட மாகாண விளையாட்டு விழாவில், முல்லைத்தீவு மாவட்டம் தங்கம் 44, வெள்ளி 41, வெண்கலம் 44 பதக்கங்களுமாக மொத்தமாக 129 பதக்கங்களைப் பெற்று யாழ். மாவட்டத்திற்கு அடுத்தபடியாக 2ம் இடத்தினை தனதாக்கியமை குறிப்பிடத்தக்கது.