யாழில் மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபர் பரிதாப மரணம்!

தென்னந்தோட்டத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் யாழ். தென்மராட்சி – கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இராஜகாரியன் இலட்சுமிநாதன் (வயது- 74) என்பவரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் மயக்கமடைந்திருந்த அவர் நோயாளர் காவு வண்டிமூலம் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட போதிலும், சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்தார்.
மரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டார்.