மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த சேது சமுத்திர திட்டத்துக்கு பாஜக ஆதரவு
சேது சமுத்திர திட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்ததற்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.
சேது சமுத்திர திட்டத்ததை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி அரசின் தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். அப்போது பாஜக சார்பில் பேசிய நயினார் நாகேந்திரன், தெய்வமாக வழிபடும் ராமர் கால் தடத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்கு பாஜக சார்பில் ஆதரவு தெரிவித்தப்பதாக கூறிய அவர், முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தால் அதனைப் பற்றி பேச வேண்டும். ஆனால் ராமர், ராமாயணத்தை பற்றி சிலர் பேசுகிறார்கள். அதனை எதிர்க்க கூடாது. தெய்வ நம்பிக்கை என பேசுவது எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது. தெய்வ வழிபாட்டை குறை சொல்வதைக் கேட்க முடியாது. அதனை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்”, என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மதத்தைப் பற்றியோ
தெய்வத்தையோ குறை சொல்லி யாரும் பேசவில்லை. தெய்வங்கள் பெயரை சொல்லி சில திட்டத்தை தடை செய்ததாக பேசினார்கள்”, என்றார்.