அரசு கலைக்கல்லூரி இல்லாத தொகுதிகளில் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் பொன்முடி
தமிழ்நாட்டில் அரசு கலைக்கல்லூரி இல்லாத தொகுதிகளில் கல்லூரி தொடங்க முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இல்லாத தொகுதிகளில் கல்லூரிகள் உருவாக்கப்படவதை பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கல்லூரி இல்லாத தொகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பிறகு இதுவரை 31 அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.