ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் பலி.
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூல், வெளியுறவுத்துறை அலுவலகம் அருகே நேற்று முன்தினம் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததில் 5 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்று நேற்று அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அமைச்சகரகத்தில் இருந்து முக்கிய அதிகாரிகள் வெளியேறும்போது அலுவலக வாசலில், இருந்த தற்கொலை படை பயங்கரவாதி கெய்பர் அல் காந்தகாரி இந்த தாக்குதலை நடத்தியதாக அவர்கள் கூறி உள்ளனர்.
இதற்கு ஆளும் தாலீபான் அதிகாரிகள் உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. ‘காபூல் தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் பலியானதாக மட்டும்’ தகவல் வெளியிட்டது. 40-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. எனவே ‘பலி எண்ணிக்கை உயரக்கூடும்’ என்று அதிகாரி ஒருவர் கூறினார். இந்த தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.