மட்டக்களப்பு புகையிரதத்தில் 3 யானைகள் மோதி உயிரிழப்பு.
மட்டக்களப்பு – திருகோணமலை – கொழும்பு புகையிரத பாதையில் ஹபரணை மற்றும் கல் ஓயா நிலையங்களுக்கு இடையில் நேற்றிரவு அதிவேகமாக பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு மூன்று யானைகள் உயிரிழந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
‘புலதிசி’ இன்டர்சிட்டி ரயிலே இன்று அதிகாலை விபத்தின் பின்னர் தடம் புரண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து அதிகாலை 1.30 மணியளவில் புறப்பட்ட புகையிரதம், ஹடரெஸ் கொடுவ பிரதேசத்திற்கு அருகில் 5.05 மணியளவில் இந்த அனர்த்தத்தை சந்தித்துள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து இன்ஜின் மற்றும் ரயில் பெட்டி ஒன்றும் தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக மட்டக்களப்பு-கொழும்பு மார்க்கத்தில் புகையிரத சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், தண்டவாளத்தை சீர்செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.