சென்னை புத்தக கண்காட்சியில் சாதனை படைக்கும் கரிசல் மீடியா!
சென்னை
எந்த ஒரு இந்திய மொழியிலும் செய்யப்படாத புதிய முயற்சியை, தமிழகத்தைச் சேர்ந்த கரிசல் மீடியா நிறுவனத்தினர் கையில் எடுத்து, அதில் வெற்றி கண்டுள்ளனர்.
கரிசல் மீடியா வெளியிட்டுள்ள புத்தகங்கள், சென்னையில் நடந்து வரும்
46வது புத்தக கண்காட்சியில்
349 மற்றும் 350 வது
அரங்கில் விற்பனையாகின்றன.
ஒரே நேரத்தில் 40-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளை உள்ளடக்கிய 20 புத்தகங்கள் தமிழில் வெளியிட்டு சாதனை படைத்துள்ளனர்.
விளையாட்டுத்துறை புத்துயிர் பெற்று வரும் இந்த சூழலில், தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் விளையாட்டு துறையில் ஈடுபட்டு அதிக அளவில் வெற்றி வாகை சூட வேண்டும் என்பதற்காக, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், கரிசல் மீடியா பதிப்பகத்தார் இதுவரை எந்த ஒரு இந்திய மொழியிலும் செய்யப்படாத முயற்சியை கையில் எடுத்து, அதில் வெற்றி கண்டுள்ளனர்.
கபடி, ஃபுட்பால், கிரிக்கெட், குத்துச்சண்டை, டென்னிஸ், கூடைப்பந்து, செஸ், பளுதூக்குதல் உள்பட 40க்கும் மேற்பட்ட விளையாட்டுகளை பற்றிய அடிப்படை விழிப்புணர்வு கட்டுரைகள், விளையாட்டு வீரர்களின் சாதனைகள், அவர்கள் கடந்து வந்த பாதைகள், நாட்டின் உயரிய விருதுகளை பற்றிய குறிப்புகள், விருதுகளை வென்றவர்களின் கதைகள், விளையாட்டுத்துறையில் ஈடுபட்டு சாதிக்கத் துடிக்கும் கிராமப்புற மாணவர்கள், வசதியற்ற இளைஞர்களுக்கு உதவக்கூடிய விளையாட்டு தொண்டு அமைப்புகள் எவை, அவற்றை தொடர்பு கொள்வது குறித்த தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் தனித்தனியாக எளிமையான விளக்கங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. பிரேம்குமார் அசோகன் மற்றும் அருணாசலம் ஆகியோர் இந்நூல்களை தொகுத்துள்ளனர்.
கரிசல் மீடியா வெளியிட்டுள்ள இந்த புத்தகங்கள், சென்னையில் நடந்து வரும் 46வது புத்தக கண்காட்சியில் 349 மற்றும் 350 வது அரங்கில் விற்பனையாகின்றன.
” விளையாட்டுத்துறையில் ஈடுபட்டு சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு தூண்டுகோலாக இருக்கும் விதமாக, இந்த 20 புத்தகங்களையும் வெளியிட்டுள்ளனர்.
விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தவர்களின் கதைகளை கேட்டு ஊக்கம் பெறுவதோடு மட்டுமின்றி, விளையாட்டுத்துறையில் ஈடுபடுவதற்கான பல்வேறு உதவி குறிப்புகளையும், கரிசல் மீடியா வெளியிட்டுள்ள புத்தகங்கள் வாயிலாக மாணவர்களும் இளைஞர்களும் தெரிந்து கொள்ளலாம்.
எளிய தமிழில் கிராமப்புற மாணவர்களும் தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, கம்ப்யூட்டர் உலகம் இதழையும் தொழில்நுட்ப நூல்களையும் வெளியிட்டு வருகிறார்கள். தற்போது விளையாட்டு துறையிலும் நம் கிராமப்புற மாணவர்கள் சாதிக்க வேண்டும் என்பதற்காக, இளையோர் உயர்வுக்காக இப்படியான நூல்களை வெளியிடுவதில் பெருமை கொள்வதாக கரிசல் மீடியா நிர்வாக இயக்குனர் மகேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
https://karisalmedia.in/online/