கொழும்பின் மேயர் வேட்பாளர் முஜிபுர்! – ஐக்கிய மக்கள் சக்தி ஏகமனதாகத் தீர்மானம்.

கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானைக் களமிறங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.
கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை முஜிபூர் ரஹ்மான் இராஜிநாமா செய்யவுள்ளார்.