21 வயது இளைஞர் கழுத்து அறுத்து கொலை – குடியரசு தின விழாவிற்கு முன் டெல்லியில் பகீர் சம்பவம்
தலைநகர் டெல்லியில் பயங்கரவாத சதிச் செயல்களுக்கு தொடர்புடய இரு நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது. டெல்வியில் குடியரசுத் தின விழாவிற்கு முன்னதாக காவல்துறையின் சிறப்பு தனிப்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அதிர்ச்சிகுரிய ஒரு வீடியோ பதிவை இணையத்தில் பார்த்துள்ளனர். அதில் ஒரு நபரை இருவர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
அந்த 37 நிமிடம் வீடியோவை பார்க்கும் போது காவல்துறைக்கு அது ஐஎஸ்ஐஸ் பயங்கரவாத அமைப்பு பாணி கொலை என்ற சந்தேகம் எழுந்தது.அதன் அடிப்படையில் காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் குற்றத்தில் ஈடுபட்ட நவ்ஷத் மற்றும் ஜக்ஜீத் சிங் என்ற இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் அம்பலமாகியுள்ளது.இவர்கள் இருவரும் ஏற்கனவே சில குற்றப் பின்னணி கொண்டவர்கள் ஆவர். இந்த இருவரும் ஒரு நபரை கடந்த டிசம்பர் மாதம் வட கிழக்கு டெல்லியில் உள்ள நவ்ஷத் வீட்டிற்கு சதித் திட்டம் தீட்டி ஏமாற்றி அழைத்து சென்றுள்ளனர்.அங்கு வைத்து அவரை கழுத்து அறுத்து கொலை செய்து 37 நொடி வீடியோவாக ரெக்காட் செய்துள்ளனர். பின்னர் அந்த வீடியோவை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதியான சோஹைல் என்பவருக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த சொஹைல் லஷ்கர் பயங்கராவத அமைப்பு பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ ஆகியவற்றுக்கு தொடர்புடையவர். கைதான நவ்ஷத் சில கிரிமினல் குற்றங்களுக்காக டெல்லி திகார் சிறையில் இருந்துள்ளார். அப்போது இவருக்கு டெல்லி செங்கோட்டை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுடன் சிறையில் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் சொஹைல் நவ்ஷத்திற்கு அறிமுகமாகியுள்ளார்.
அதேபோல், கைதான மற்றொரு நபர் ஜக்ஜீத் சிங் காலிஸ்தான் பிரிவினை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். இவர் கனடாவைச் சேர்ந்த கேங்க்ஸ்டரான அர்ஷ்தீப் சிங்கின் கூட்டாளி. நவ்ஷத் மற்றும் ஜக்ஜீத் சிங் ஆகிய இருவருக்கும் டெல்லி சிறையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதி ஷொஹைல் இந்த இருவரையும் இயக்கத் தொடங்கியுள்ளார்.
நவ்ஷத் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி இந்து தலைவர்களை குறிவைத்து கொல்ல வேண்டும் எனவும், ஜக்ஜீத் சிங் காலிஸ்தான் பிரிவினை பயங்கரவாத அமைப்பை பஞ்சாப்பில் பரப்ப வேண்டும் எனவும் அசைன்மென்ட் கொடுக்கப்பட்டதாக காவல்துறை விசாரணை தகவல்கள் கூறிகின்றன.
தங்கள் அசைன்மென்ட்டின் சோதனை முயற்சியாகத் தான் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் இந்த கொடூர கொலையை செய்து அதை சொஹைலுக்கு வீடியோ அனுப்பியுள்ளனர். அவர்களிடம் இருந்து 2 கிரெனேடுகள், 3 துப்பாக்கிகள் ஆகியவற்றை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. இவர்களிடம் தொடர் விசாரணை செய்துவரும் காவல்துறை இந்த சதிப்பின்னணியில் தொடர்புடைய மேலும் பலருக்கு வலைவீசி வருகிறது.