படப்பிடிப்பு தளத்தில் விபத்து.. விஜய் ஆண்டனி காயம்..

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம்’பிச்சைக்காரன்’. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு விஜய் ஆண்டனிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.