பிக் பாஸ் ஜனனிக்கு அடித்த மாபெரும் ஜாக்பாட்.. விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு.

தளபதி 67 படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விஜய் – லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைகிறார்கள்.
ஏற்கனவே மாஸ்டர் எனும் மிகப்பெரிய வெற்றியை இந்த கூட்டணி கொடுத்துள்ளதால், இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படத்தில் திரிஷா, கவுதம் மேனன், மிஸ்கின், சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இன்னும் சில தினங்களில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிக் பாஸ் ஜனனி கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் 6 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜனனி.
இவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியிருந்தாலும், ரசிகர்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துவிட்டார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என செய்திகள் வெளிவந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் படக்குழுவிடம் இருந்து வெளிவரும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக.