கேரளாவில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் அரசு அதிரடி உத்தரவு!
சீனா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தாங்கள் பணிபுரியும் இடங்கள் மட்டுமின்றி காரில் பயணிக்கும்போதும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொ
ரோனா பரவலை தடுக்க தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், தனியார் அலுவலகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் சானிடைசர்கள் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த 30 நாட்களுக்கு இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.