ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர் முஜிபுரா? ஹிருணிகாவா?
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொழும்பு மேயர் வேட்பாளராக போட்டியிட தயாராக இருப்பதாகவும், ஆனால் அவர் தயங்குவதாகவும் டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கடைசி நொடி வரை ஒத்திவைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வது குறித்து முஜிபுர் ரஹ்மான் ஆலோசித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படுமாயின் அவர் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும்.
கொழும்பு மேயர் வேட்பாளராக திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு சஜித் பிரேமதாசவின் மனைவி திருமதி ஜலானி பிரேமதாசவின் ஆசியும் கிடைத்துள்ளதாகவும் அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.