வங்கிக் கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டியடித்த இரண்டு பெண் காவலர்கள்!
பீகாரில் வங்கிக் கொள்ளையர்களை இரண்டு பெண் காவலர்கள் துணிச்சலாக விரட்டியடித்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. ஹாஜிபூர் மாவட்டத்தில் உள்ள வங்கியில் முகமூடி அணிந்தபடி துப்பாக்கியுடன் வந்த கொள்ளையர்கள் சிலர் உள்ளே நுழைந்து கொள்ளையடிக்க முயன்றனர். பாதுகாப்புப் பணியிலிருந்த ஜூஹி குமாரி, சாந்தி ஆகிய இரு பெண் போலீஸார், கொள்ளையர்களை எதிர்த்துப் போராடி, விரட்டியடித்தனர்.
இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த துணிச்சலான காவலர்களை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இவர்களை பாராட்டி நிச்சயம் விருதுகளை வழங்கவேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.