நுவரெலியா நானுஓயா விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

நுவரெலியா நானுஓயா ரதெல்ல குறுந்தொகை வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ், வேன் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியின் 11ஆம் ஆண்டு மாணவர்களை வருடாந்த கல்விப் பயணமாக ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வேன் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த 6 பேரும் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 3 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது பேருந்தில் 44 மாணவர்கள் பயணித்துள்ளதாகவும், 41 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும், 3 சிறுவர்கள் எவ்வித பாதிப்புமின்றி உயிர் பிழைத்துள்ளதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை விரைவில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா வைத்தியசாலையின் பணிப்பாளர் மகேந்திர சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பஸ் மற்றும் முச்சக்கர வண்டியும் பலத்த சேதமடைந்துள்ளதுடன், குறித்த வேன் ஹட்டன் குடாகம பகுதியை சேர்ந்த வேன் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற போது வேனில் ஒன்பது பேர் பயணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.