யாழில் முகமூடி அணிந்த 4 பேரால் வர்த்தகர் ஒருவர் வெட்டிப் படுகொலை!

மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த நால்வர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து 30 வயதுடைய வர்த்தகர் ஒருவரை வெட்டி படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ரவீந்திரன் அஜித் என்ற தொழிலதிபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.