வாக்குச் சீட்டு தயாரிக்கும் பணியை தேர்தல் ஆணையம் இன்று ஆரம்பிக்கிறது!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளைத் தயாரிக்கும் பணிகள் இன்று (22) ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை முறையாக கையளித்த அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களை கருத்தில் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
இதன்படி, நடைபெறவுள்ள 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்குச்சீட்டுகள் தனித்தனியாக தயாரிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறு திட்டமிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் அச்சடிக்க உடனடியாக அரசு அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இதேவேளை, உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பிரதிநிதிகளை எதிர்வரும் 24ஆம் திகதி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவ்வேளையில் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அறிவிப்பதே இந்த அழைப்பின் நோக்கமாகும்.