அரசு ஊழியர்களின் சம்பளம் வழங்கும் தேதி குறித்த அறிவிப்பு!
அரசு ஊழியர்களின் மாத சம்பளம் தேதி குறித்து நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி, அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளம் ஜனவரி 25ஆம் திகதியும், நிர்வாக தர அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளம் அன்றே அல்லது ஜனவரி 26 மறுதினமோ வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதில் சில நாட்கள் தாமதம் ஏற்படும் என கடந்த வாரம் அரசாங்கம் அறிவித்திருந்தது.
அரசாங்கத்தின் இந்த வருடத்திற்கான வருமானத் திட்டத்தின் பிரகாரம், காலதாமதம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், நிதியமைச்சராக ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த பிரேரணையின் ஊடாக அரசாங்கச் செலவுகளை நிர்வகிப்பதற்கான அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலதாமதம் செய்திருந்தார்.