நாட்டின் வீழ்ச்சிக்கு மொட்டு கட்சி மட்டும் பொறுப்பல்ல : பசில்.
நாட்டை வங்குரோத்து செய்த 74ம் ஆண்டுக்கு நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும் பொறுப்பு : மொட்டு 03 வருடங்களே ஆட்சி செய்தது என கண்டியில் வைத்து பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சுதந்திரமடைந்து 74 வருடங்களில் நாட்டை ஆட்சி செய்த சகல கட்சிகளுமே, நாடு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு காரணம் எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சில ஆண்டுகளே நாட்டை ஆட்சி செய்தது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கும் வேளையில் இன்று (24) தலதா பெருமானை வழிபடுவதற்காக கண்டிக்கு வருகை தந்த பசில் ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட மாட்டாது என நம்பித்தான் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தேன் என்றார். தேர்தல் தாமதமாகும் என சிலர் கூறினாலும் அது அவ்வாறு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொஹொட்டுவ 252 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தனித்து போட்டியிடவுள்ளதாகவும், மேலும் சிலவற்றில் ஏனைய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிடவுள்ளதாகவும் பசில் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் வீணை சின்னத்திலும், மட்டக்களப்பில் படகு சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன் கட்சிகளில் புதியவர்கள் இணைவதும், கட்சிகளை விட்டு வெளியேறுவதும் ஒருவகையான அரசியல் எனவும், அவ்வாறான சூழ்நிலைகளில் எழும் சவால்களை வெற்றிகொள்ளும் திறமை இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.