முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா : ஏ.எச்.எம். பௌசி பாராளுமன்றத்துக்கு ….
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததை அடுத்து வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஏ.எச்.எம். பௌசியின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆம் திகதி முஜிபுர் ரஹ்மான் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி 06 ஆசனங்களைப் பெற்ற நிலையில் , ஏ.எச்.எம்.பௌசி 48,701 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
இதன்படி, அவர் விருப்பப்பட்டியலில் 07வது இடத்தைப் பெற்றார்.
முன்னாள் கொழும்பு மேயராகவும் இருந்த ஏ.எச்.எம்.பௌசிக்கு தற்போது 85 வயது.