திடீரென மருத்துவமனையில் அனுமதியாகிய நடிகர் மனோபாலா.

இயக்குனர் மற்றும் நடிகராக சினிமாவில் வலம் வருபவர் மனோபாலா.இவரின் நகைச்சுவைக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.1982 ஆம் ஆண்டு ஆகாயகங்கை என்ற படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

20க்கும் அதிகமான படங்களை தமிழ் சினிமாவில் இயக்கியுள்ளார்,அதில் ஒரு சில படங்கள் மாபெரும் வெற்றியும் பெற்றுள்ளது.தற்போது முழுநேரம் நகைச்சுவை நடிகராக பலரையும் சிரிக்க வைத்து வருகிறார்.பல முன்னனி கதாநாயகர்களுடனும் இவர் நடித்துவிட்டார்.1994 ஆம் ஆண்டு தாய்மாமன் படத்தில் நடித்து சினிமாவில் தனது முகத்தினை முதல் முறையாக காமித்தார்.

இவரின் நகைச்சுவைக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி குக் வித் கோமாளி , இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனது சமையல் திறமையை காண்பித்தார்.

இறுதி போட்டி வரை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாதியிலேயே எலிமினேட் ஆகி வெளியே சென்று அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தார்.பல நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் இன்றுவரை தனது நகைச்சுவையால் அசத்தி மக்களை சிரிக்க வைப்பதில் தனி திறமை கொண்டவர்.

தற்போது இவர் மருத்துவமனையில் அனுமதி ஆகியிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை இவரது ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல் நலம் பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு ஆஞ்சியோ முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தற்போது அவர் உடல் நலமுடன் இருக்கிறார்,விரைவில் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரை உடல்நலம் பெற வேண்டி அவரது ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.