மக்கள் நீதி மய்யம் கட்சியின் சமூக வலைத்தளம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக தகவல்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சமூக வலைத்தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 30 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க உள்ளதாக சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தங்கள் கட்சியின் வலைத்தள பக்கம் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.