ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி கொழும்பில் ‘கறுப்பு ஜனவரி’ போராட்டம்!

படுகொலை செய்யப்பட்ட, தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தும் ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம் (27) மாலை கொழும்பு விகாரமகாதேவி பூங்காவுக்கு அருகாலையில் நடைபெற்றது.
இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கவனயீர்ப்பில் ஊடக, சிவில் மற்றும் தொழிற்சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.