விமானப்படையின் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.

மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப் படையை சேர்ந்த இரண்டு ஜெட் விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காகப் புறப்பட்ட சுகோய் 30, மிராஜ் 2000 ஆகிய 2 விமானங்கள் மெரோனாவில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. சுகோய் விமானத்தில் 2 விமானிகளும், மிராஜ் விமானத்தில் ஒரு விமானியும் பயணித்துள்ளனர். 2 விமானிகள் தப்பியதாகத் தகவல் கூறுகின்றன. ஒருவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளான தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ம.பி, ராஜஸ்தானில் 3 விமானப் படை விமானங்கள் விபத்துக்குள்ளாகின. அடுத்து ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் விபத்துள்ளானது. இந்த விபத்து தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.