JVPயினர் 13க்கு ஆதரவா? இல்லையா? நிலைப்பாட்டை சொல்லும் நேரம் : சன்ன ஜயசுமண
ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைப்படி பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை இன்னும் சில வாரங்களுக்குள் முழுமையாக அமுல்படுத்த JVP தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இணக்கம் தெரிவிக்குமா? இல்லையா? என காலம் கடத்தாமல் மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண, மதவாச்சியில் நடந்த கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.
ஜே.ஆர்.ஜயவர்தன முதல் கோட்டாபய ராஜபக்ஷ வரையிலான ஏழு நிறைவேற்று ஜனாதிபதிகள் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தாமைக்கு காரணம் அதன் விளைவுகள் குறித்து ஓரளவுக்கு அவர்கள் புரிந்துகொண்டிருந்ததாகவும் ஜெயசுமண மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய கருத்து என்னவெனில், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினால் நாட்டின் ஒருமைப்பாடு பறிபோகும் என 4 நீதிபதிகளும், ஒற்றுமைப் பிரச்சினையல்ல என மேலும் 4 நீதிபதிகளும், மற்றொரு நீதிபதி ஒற்றுமையை காக்க பல ஷரத்துகளுக்கு உட்பட்டது பெயரால் மட்டுமே என்று கூறினார். இன்று அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துவோம் எனப் பேசும் ரணில் விக்கிரமசிங்க, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பை தவறாகப் புரிந்துகொண்டு ஜே.ஆர்.ஜயவர்தன செய்த மோசடி குறித்து மௌனம் காப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
1987ஆம் ஆண்டு 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்ட போது, அதனை எதிர்த்து உயிர், உடமைச் சேதங்களை முதன்முதலில் ஏற்படுத்திய ஜனதா விமுக்தி பெரமுன, அப்போது உயிர் தியாகம் செய்த ஜனதா விமுக்தி பெரமுன தேசிய திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க எடுத்து வரும் வேலைத்திட்டம் தொடர்பில் நாட்டுக்கு தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என சன்ன ஜெயசுமண தெரிவித்துள்ளார். JVP யினர் , தமக்கும் , 13க்கும் எந்த சம்பந்தம் இல்லாதது போல் இந்த தருணத்தில் தங்களைக் காப்பாற்றுவது பாரிய மோசடி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கூட இராஜினாமா செய்த தற்போதைய சபாநாயகரின் அணுகுமுறையும், 13ஆவது திருத்தத்தை தொடர்ந்து எதிர்த்த தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர், ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாட்டை நாட்டிற்கு அம்பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.