சுவிசில் ATMயை தகர்த்து பணத்தை எடுத்துச் சென்றவர்களை போலீஸ் தேடுகிறது

இன்று (30) அதிகாலை 2 மணியளவில் நொய்யன்டோர்ஃப் (Neuendorf) பகுதியில் உள்ள ATM, ஒன்றை இனம் தெரியாத நபர்கள் வெடி வைத்து தகர்த்ததோடு , அங்குள்ள பணத்தையும் எடுத்துக் கொண்டு மாயமாக மறைந்துவிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். குற்றவாளிகள் தப்பியோடிவிட்டனர். குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
விற்பனை தொகுதி கட்டிடத்தில் நிறுவப்பட்டிருந்த ஏடிஎம், குண்டுவெடிப்பால் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய அறிவின்படி, கறுப்பு ஆடை அணிந்த , குறைந்தது இரண்டு பேர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் என நம்புகிறார்கள், களவாடிய பணத்தோடு அவர்கள் குன்ஸ்கர் (Gunzger) எனும் திசையில் தப்பி ஓடிவிட்டதாக தெரிய வருகிறது. உடனடியாக போலீசாரால் பாதைகளை மறைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட போதிலும், அவர்களால் தப்பியோட முடிந்துள்ளது. மேலதிக தகவல்களை பெற குற்றவாளிகளை கண்ட சாட்சிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.