யாழ்.மாநகரசபை மேயர் பிரச்சினை தீர்க்கப்படாததால் பெரும் நெருக்கடி

பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் யாழ்.மாநகர சபை அமர்வு கடந்த 30ஆம் திகதி ஆரம்பமாகிய போதிலும் பெரும் கலவரம் மற்றும் சபை உறுப்பினர்களின் எதிர்ப்பு என்பனவற்றுக்கு மத்தியில் அதனை நிறுத்த வேண்டியதாயிற்று.
யாழ்ப்பாணத்தின் முன்னாள் மேயர் மணிவண்ணன் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் முதல் வாசிப்பின் பின்னர் தோற்கடிக்கப்பட்டதுடன், இரண்டாவது தடவையாக வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க மறுத்து தனது பதவியை இராஜினாமா செய்தார்.
புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஜனவரி 19 அன்று அறிவிக்கப்பட்டது, ஆனால் அன்று மேயரை தேர்ந்தெடுக்க முடியவில்லை.
யாழ்.மாநகர சபையின் மேயராக யாழ்.மாநகர சபையின் மேயராக முன்னாள் மேயர் அர்னால்டு இமானுவேல் , யாழ் உள்ளுராட்சி ஆணையாளர் நியமித்த உடனேயே, அதற்கு எதிராக ஒரு குழுவினர் நீதிமன்றம் சென்றதுடன், மற்றொரு பிரிவினர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
யாழ்.மாநகர சபையின் இவ்வருட அமர்வு ஆரம்பமான நிலையில் முன்னாள் மேயர் மணிவண்ணனின் ஆதரவாளர்கள் சபையில் ஆர்ப்பாட்டம் செய்து பெரும் கலவரத்தை உருவாக்கி இறுதியில் சபையை புறக்கணித்து விட்டு வெளியேறியமையால் யாழ்.மாநகரசபை மேயர் பிரச்சினை தீர்க்கப்படாமல் பெரும் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளது.