போலி கடிதத்தால் கலங்கிப் போன சீன தூதரகம் : விசாரணை செய்ய முறைப்பாடு
சீன தூதரகத்தின் கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி போலி கடிதம் வெளியிடப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு இலங்கைக்கான சீனத் தூதரகம் ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த போலி கடிதத்தை தயாரித்தவர்கள் யார், யார் விநியோகம் செய்தார்கள், இதை செய்ய காரணம் என்ன என்பதை உடனடியாக விசாரிக்க சீன தூதரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
எனினும் சீன தூதரகம் உள்ளக விசாரணை நடத்தி அனைத்து தகவல்களையும் வெளிக்கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலைமையை பாரதூரமான விடயமாக கருதி எதிர்காலத்தில் பொறுப்பானவர்களுக்கு இந்த தகவலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
The Chinese Embassy in Sri Lanka clarifies that a letter circulating on social media, under its official letter head and written to Sri Lankan President & Financial Minister, is completely forged. Please follow the official sources of information. pic.twitter.com/nf5ehZyj6g
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) January 24, 2023