ஏழு முக்கிய அம்சங்களுடன் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு: நிதியமைச்சர்
ஏழு முக்கிய அம்சங்கள் அடங்கியதாக நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தி 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.
அப்போது அவர் பேசுகையில், 7 முக்கிய அம்சங்கள் அடங்கியதாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைசி நிலை வரை வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, தேசத்தின் வளங்களை பயன்படுத்துதலுக்கு முக்கியத்துவம், பசுமை வளர்ச்சி, இளைஞர்களின் ஆற்றல், நிதித்துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.