சமந்தாவின் படம் மேலும் தள்ளி வைப்பு?

குணசேகர் இயக்கத்தில், சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் தெலுங்குப் படம் ‘சாகுந்தலம்’. இப்படத்தைத் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா படமாக பிப்ரவரி 17ம் தேதி வெளியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்.
ஆனால், தற்போது படத்தை கோடை விடுமுறைக்கு தள்ளி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஹிந்தியில் ஷாரூக், தீபிகா நடித்து வெளிவந்துள்ள ‘பதான்’ படம் பெரும் வெற்றி பெற்றுள்ளதால் ஹிந்தியில் அதிக தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்பதே இப்படம் தள்ளி வைப்புக்குக் காரணம் என்கிறார்கள். ஏற்கெனவே இந்தப் படம் கடந்த வருடம் நவம்பர் 4ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் பிப்ரவரி 17க்குத் தள்ளி வைக்கப்பட்டது.
கோடை விடுமுறையில் வந்தால் இப்படம் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ‘சாகுந்தலம்’ படத்தை ‘வாரிசு’ படத் தயாரிப்பாளரான தில் ராஜு தான் தெலுங்கில் வெளியிடுகிறார்.